வேதனையை வாழ்வில்
இதுவரைக் கண்டிராதவனும்
வேதனையைத் தவிர
வேறெதுவும் கண்டிராதவனும்
குறிப்பிட்டப் புள்ளியில்
ஒன்றே தாம் கண்டீர்!
துன்பத்தை அறியாதான்
இன்பமும் அறியான்
இன்பத்திலேயே இருப்பவன்
துளி துன்பமே வரினும்
இடிந்தே போவான்! கடவுட் கொள்கை
கசந்து போகும்
கலியின் அபாயம்
இவ்விடம் அதிகம்!
இன்பம் = துன்பம் என்பது
ஒரு புதிய சமன்பாடு !
உரைத்துப் பார்த்து
உரை சொல்லும் கல்போல்
புனிதமாக்க வந்து
நம்மை எடை போடும்
புரியாதப் புதிரா
இன்பமும் துன்பமும்?
உள்ளச் சமநிலையும்
உண்மை மொழியும்
பேரின்ப நாட்டமும்
பெரியோர் நட்பும்/ ஆசியும்
நட்டமில்லா வாழ்வு நல்கி
நன்மை பயக்கும்!
இன்பமும் துன்பமும்
வீ ழ்த்திடாத வண்ணம் காக்க
குற்றமில்லாப் பெருமானின்
நாமந்தனைப் பாடி.. அவன்
பொற்றாமரைப் பதத்தில்
மனம் புதைப்போம் வாழி!
இதுவரைக் கண்டிராதவனும்
வேதனையைத் தவிர
வேறெதுவும் கண்டிராதவனும்
குறிப்பிட்டப் புள்ளியில்
ஒன்றே தாம் கண்டீர்!
துன்பத்தை அறியாதான்
இன்பமும் அறியான்
இன்பத்திலேயே இருப்பவன்
துளி துன்பமே வரினும்
இடிந்தே போவான்! கடவுட் கொள்கை
கசந்து போகும்
கலியின் அபாயம்
இவ்விடம் அதிகம்!
இன்பம் = துன்பம் என்பது
ஒரு புதிய சமன்பாடு !
உரைத்துப் பார்த்து
உரை சொல்லும் கல்போல்
புனிதமாக்க வந்து
நம்மை எடை போடும்
புரியாதப் புதிரா
இன்பமும் துன்பமும்?
உள்ளச் சமநிலையும்
உண்மை மொழியும்
பேரின்ப நாட்டமும்
பெரியோர் நட்பும்/ ஆசியும்
நட்டமில்லா வாழ்வு நல்கி
நன்மை பயக்கும்!
இன்பமும் துன்பமும்
வீ ழ்த்திடாத வண்ணம் காக்க
குற்றமில்லாப் பெருமானின்
நாமந்தனைப் பாடி.. அவன்
பொற்றாமரைப் பதத்தில்
மனம் புதைப்போம் வாழி!

No comments:
Post a Comment