Tuesday, March 15, 2011

'ஆண்மை' எனப்படுவது ?


காளையை அஞ்சி ஓடச்  செய்யும்
கட்டிளங் காளையே!
கும்பலாகச் சென்று அதன்
கொம்பைத் திருகுவதிலா
ஆண்மை இருக்கிறது? ...இல்லவே!

ஐந்தறிவு ஜீவன் அதை
அடக்குவதில் என்ன இலாபம் ?
றி வானே !  நின்

ஐம்புலங்களை அடக்கிப் பார்!
அற்புதங்கள் நிகழும்
!

ஜல்லி
க் கட்டு இல்லை எனில்
மறத்  தமிழன் ஒன்றும்
மானம் கெட்டுப் போக மாட்டான்.
 

மாற்றம் மட்டுமே
மாறாத  தன்மை யுடைத்து ! 


பழமை தவிர்; புதுமை சேர்;
காலத்தோடு பயணம் செய்!
 

மகத்தான சாதனை
மண்ணிலும் விண்ணிலும்
ஏன்.. உன்னிலும் படைத்து
உயர்வு கொள்!
பிறரை

உய்விக்கச் செய் !
 
சிற்றின்ப மகிழ்விற்கு

சக்தியை
ச் சீரழிக்காது
உலகம் உய்விக்க 

உனக்குள் பயணம் செய்!
 
எத்திக்கும் சென்று
நல்லவை
க் கற்று / பெற்று
பொருள் ஈட்டு ! அருள் கூட்டு !
மருள் விரட்டு !
 

தமிழன் உயரும் போது
தமிழும் உயரும் !
 


தலை நிமிர்ந்துச் செல்
தன்னை வென்றவனே 

இத்தரணி வென்றவன் !
எவ்வுயிர்க்கும் அன்பு  செய் !

ஏழ்மை போக்க 

இயன்றவரை உதவு!
மெய்யடியார் நட்பு கொள் !
மெய்யாய் வாழ் !

"ஆண்மை எனப்படுவது  யாதெனின்  ஐம்பொறி

அடக்கி வெலல் ஆம் "  என
புதுக்குறள் சொல்!
புத்தாக்கச் சிந்தனையோடு

எழுவாய்
நல் இலக்கணமாய் வாழி !

No comments:

Post a Comment

Load Counter
spa equipment wholesale