Tuesday, March 15, 2011

வாயில் தோறும் வள்ளுவம் ?

தெள்ளு தமிழ் வள்ளுவனுக்குக்
கோட்டம் கட்டினோம்!
உருவம் அறியப்படாத அவனுக்கு
உருவமும் ஊட்டினோம்.!
வான்மறைத் தந்தவனுக்கு
முக்கடல் கூடும் இடம்
வானுயரச் சிலையும் வைத்தோம்!
வாயில் தோறும் வள்ளுவம் என்று
வண்ணக் குறள்களால் அலங்கரித்தோம்!
ஆயினும் அவன் வழி நடப்பதற்கு
ஆளிங்கு அதிகம் இல்லை!
சான்றோர்க்கு சந்திக்கு ஒரு சிலை
வைப்பதோடு நம் கடமை முடிவதாய்
கருத்தில் கொள்ளாதிருப்பது எக் காலம்?

No comments:

Post a Comment

Load Counter
spa equipment wholesale