Tuesday, March 15, 2011

தட்டாம் பூச்சிக்குத் தாலிக் கட்டி

 களிமண் அடுப்புச் செய்து
காவி வீட்டிற்கு அடித்து

தெருவையே வளைத்துக்
கோலமிட்டு குதூகலம் அடைந்து, 


சாணிப் பிள்ளையாருக்குச்
சந்தனத்தில் பொட்டும் வைத்து
செம்பருத்திப்  பூ  சேர்த்து
அருகம்புல் மாலை சூட்டி  


அக்கம் பக்கத்தாரை
அன்போடு அழைத்து
அவல் பொரி சர்க்கரை
தேங்காய் கலந்து ஊட்டி 


கூடிப் பொங்கலிட்டு
குலவு சத்தமும் இட்டு 
மனம் மகிழப் பாடி வயலில் திரிந்து
வாய்க்காலில் வாணரமாய்
குதித் தெழுந்து,


தட்டாம் பூச்சிக்குத்
தாலிக் கட்டிப் பறக்க விட்டு 
பனங் கொட்டைச் சக்கரத்தில்
வண்டி செய்து தெருவை
வட்டமடித்து கொட்டமடித்து 


அவித்தக் கிழங்கு
உண்ட வயிறால்
அரைஞாண் (கயிறு) கழன்றுப் போக
அரை டவுசரும் களேபரம் செய்ய 


அஞ்சா நெஞ்சனாக 
எதைக் கண்டும் கலங்காது :)
பல்லாங் குழியும் 
கபடிக்  கபடியும் 
ஆடு புலி ஆட்டமும்
களைப்பின்றி ஆடி  


கவலை  இன்றி
களித்தக்  காலங்கள்
என்  கனவில் மட்டுமே
வந்து செல்கிறது ! 


ஹும் ! 

பட்டணத்து வாழ்க்கைப்  பொங்கல்
ஆர்ய பவனிலும் 
ஆறாத பவனிலும் தான்
சுவைக்கிறது  என் செய்ய?


கோலமிட  இங்குத்  தெருவும்  இல்லை
குலவு இடும் பெண்களும் 
இல்லை
காலமிது மாறியது காண்
ன் வீட்டுப் பொங்கல் இன்று
எல்பிஜி  ஸ்டவ்வில் தானே ! -
 

பொங்கல் வாழ்த்துக்களுடன்,
நம்பிக்கை ராமா

No comments:

Post a Comment

Load Counter
spa equipment wholesale