பெண் இன்பமேபேரின்பம் என்பர்!
பீரும் ,பிராந்தியும் விஷ்கியும்
சிக்கனும் மட்டனும் பன்றியும்
சுவைத்தால் சொர்க்கம் என்பர்!
காமத்தின் மூலம்
கடவுளைக் காட்டுகிறேன் என்று
போலிக் காவிகள்,
கன்னியரின் கற்பை
சூறைக் கொள்வர்!
அத்தனைக்கும் ஆசைப்படு
அதுதான் ஆன்மீகம் என்று
ஆசை வார்த்தைச் சொல்வர்!
இந்த வயதினிலும்
என்னால் அது (?) முடியும் என்று
அவிசாரியாய் நகைப்பர்!
குள்ள நரி வாழ்க்கையில்
குதூகலம் காண்பர்!
நீதான் கடவுள்!
எதையும் அடக்காதே
இயற்கையை மீறாதே
என்றெல்லாம் சொல்லி
திமிறும் உன் காமத்திற்கு
திமிராய்த் தீ மூட்டுவர்!
அன்பனே,எச்சரிக்கையாய் இரு!
இது கலியின் யுகம்!
கண்சிமிட்டும் நேரத்தில்
உன்னைக் களேபரம் செய்ய
காவி, வெள்ளை, பச்சை என்று
எல்லா நிறத்திலும்
வட்டமிடும் நயவஞ்சகப் பேய்கள்
இவ்வுலகில் நிரம்ப உண்டு!
நாடெங்கிலும் கூட்டம் கூட்டி
நயமாய் பேசிப் பேசி
பிறர் உழைப்பை உறிஞ்சி
டிரஸ்ட் என்று கோடிகள் சேர்த்து
உல்லாச வாழ்வும் வாழ்வர்!
கடவுளை மட்டுமே
தேடுவதல்ல ஆன்மீகம்
என்று சொல்லி
உன் அலைபாயும் மனமும்
உற்சாகப் போதையில் வீழும் விதம்
வித விதமாய்ப் பேசுவதில்
வித்தகர்கள் இவர்கள் !
இவர்கள் கதவைத் திறந்தால் தெரியும்
காற்று மட்டும் வராது
கண்றாவிகளும் வரும் !
நாத்திகவாதிகள் இவர்களை விட
எவ்வளவோ தேவலாம் போலும்!
உண்மையான ஆன்மீகம்
எங்கு உள்ளது என்று
உண்மையாகவே நீ விரும்பினால்..
யோசி யோசி தீவிரமாய் யோசி!
பெண் , மண் , புகழ் விரும்பா
பெரியோனைக் கண்டு , சோதித்து
சிக்கெனப் பிடித்து
நீயும் அவன் வழியில் சிறந்து விடு !
அத்தனுக்கு ( இறைவன் ) ஆசைப்பட்டால்
நன்மை உண்டு ... ஆனால் இங்கே
அத்தனைக்கும் ஆசைப்பட்டால்
அழிவுதான் வாழ்வில் மிஞ்சும் !
எத்தர்களை அடையாளம் காண்
எளிமையாய் இரு !
ஒன்றை என்றும் நினைவில் கொள்
புலன்களை அடக்கிடாமல்
புண்ணியராக முடியாது!
வெற்றுக் கோமாளிகளின்
வார்த்தை ஜாலங்களை
வேதமாய்க் கொண்டு ஏமாறாதே!
மெய்யான ஞானியரை
மெய்யாகவே அறிந்து கொள்!
உன் தேடல் உண்மை எனில்
அதில் தீவிர(த)ம் இருக்கும் எனில்
விடையும் விரைவில் கிட்டும்!
வெற்றி உண்டு நீ வாழி!
பீரும் ,பிராந்தியும் விஷ்கியும்
சிக்கனும் மட்டனும் பன்றியும்
சுவைத்தால் சொர்க்கம் என்பர்!
காமத்தின் மூலம்
கடவுளைக் காட்டுகிறேன் என்று
போலிக் காவிகள்,
கன்னியரின் கற்பை
சூறைக் கொள்வர்!
அத்தனைக்கும் ஆசைப்படு
அதுதான் ஆன்மீகம் என்று
ஆசை வார்த்தைச் சொல்வர்!
இந்த வயதினிலும்
என்னால் அது (?) முடியும் என்று
அவிசாரியாய் நகைப்பர்!
குள்ள நரி வாழ்க்கையில்
குதூகலம் காண்பர்!
நீதான் கடவுள்!
எதையும் அடக்காதே
இயற்கையை மீறாதே
என்றெல்லாம் சொல்லி
திமிறும் உன் காமத்திற்கு
திமிராய்த் தீ மூட்டுவர்!
அன்பனே,எச்சரிக்கையாய் இரு!
இது கலியின் யுகம்!
கண்சிமிட்டும் நேரத்தில்
உன்னைக் களேபரம் செய்ய
காவி, வெள்ளை, பச்சை என்று
எல்லா நிறத்திலும்
வட்டமிடும் நயவஞ்சகப் பேய்கள்
இவ்வுலகில் நிரம்ப உண்டு!
நாடெங்கிலும் கூட்டம் கூட்டி
நயமாய் பேசிப் பேசி
பிறர் உழைப்பை உறிஞ்சி
டிரஸ்ட் என்று கோடிகள் சேர்த்து
உல்லாச வாழ்வும் வாழ்வர்!
கடவுளை மட்டுமே
தேடுவதல்ல ஆன்மீகம்
என்று சொல்லி
உன் அலைபாயும் மனமும்
உற்சாகப் போதையில் வீழும் விதம்
வித விதமாய்ப் பேசுவதில்
வித்தகர்கள் இவர்கள் !
இவர்கள் கதவைத் திறந்தால் தெரியும்
காற்று மட்டும் வராது
கண்றாவிகளும் வரும் !
நாத்திகவாதிகள் இவர்களை விட
எவ்வளவோ தேவலாம் போலும்!
உண்மையான ஆன்மீகம்
எங்கு உள்ளது என்று
உண்மையாகவே நீ விரும்பினால்..
யோசி யோசி தீவிரமாய் யோசி!
பெண் , மண் , புகழ் விரும்பா
பெரியோனைக் கண்டு , சோதித்து
சிக்கெனப் பிடித்து
நீயும் அவன் வழியில் சிறந்து விடு !
அத்தனுக்கு ( இறைவன் ) ஆசைப்பட்டால்
நன்மை உண்டு ... ஆனால் இங்கே
அத்தனைக்கும் ஆசைப்பட்டால்
அழிவுதான் வாழ்வில் மிஞ்சும் !
எத்தர்களை அடையாளம் காண்
எளிமையாய் இரு !
ஒன்றை என்றும் நினைவில் கொள்
புலன்களை அடக்கிடாமல்
புண்ணியராக முடியாது!
வெற்றுக் கோமாளிகளின்
வார்த்தை ஜாலங்களை
வேதமாய்க் கொண்டு ஏமாறாதே!
மெய்யான ஞானியரை
மெய்யாகவே அறிந்து கொள்!
உன் தேடல் உண்மை எனில்
அதில் தீவிர(த)ம் இருக்கும் எனில்
விடையும் விரைவில் கிட்டும்!
வெற்றி உண்டு நீ வாழி!

No comments:
Post a Comment